ஸ்வீடனில் விபத்தில் சிக்கிய ரயில் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
கிழக்கு ஸ்வீடனில் 120க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மலைப்பாங்கான இடத்தில் உள்ள தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளது.
இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கிழக்கு ஸ்வீடனில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதால், மழையால் ரயில்வே கரை ஓரளவிற்கு அடித்துச் செல்லப்பட்டு, மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.





