இலங்கை

இலங்கையில் நடந்த சோகம் – கணவனுக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

கணவனுக்காக காத்திருந்த பெண் ஒருவர் மீது லொறியொன்று மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

பிடிகல மாபலகம வீதியின் மானமிட பிரதேசத்தில் கடந்த 3ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வத்தஹேன தியகிதுல் கந்த பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி என்ற 39 வயதுடைய திருமணமான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும் கொழும்பில் பணிபுரிந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய இவர், தனது கணவருடன் வௌியில் செல்வதற்காக வீதியில் காத்திருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பெண் பிரதேசவாசிகளின் உதவியுடன் நியாகம கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்திய லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!