இலங்கையில் நடந்த சோகம் – மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை பலி!

இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
சகோதரனும் சகோதரியுமே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 36 times, 1 visits today)