ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்கிய கோர விபத்து – 10 பேர் பலி – ஆபத்தான நிலையில் 25 பேர்

ஆஸ்திரேலியாவில் – நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் சிட்னிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதியாக இருந்த 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உட்பட பெருமளவிலான மக்கள், இந்த துயரச் சம்பவத்தால் தாங்கள் ஆழ்ந்த வருத்தமடைவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித