பிரான்ஸில் புதுவருட கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம் – சிறுவனுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் புதுவருட கொண்டாட்டத்தின் போது கார் மோதி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Strasbourg (Bas-Rhin)நகரில் புதுவருடத்தினை வரவேற்ற நகர மக்கள் தயாராக இருந்த நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்று மோதி 15 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சாரதி தேடப்பட்டு வருகிறார்.
புதுவருட இரவில் இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
(Visited 2 times, 1 visits today)