வட அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் மணப்பெண் உயிரிழந்துள்ளார்.

வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கரோலினா மாகாணத்தில் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த மணமக்கள் வாகனமும், எதிரே அதிவேகத்தில் வந்த காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் புதுமண தம்பதியரின் வாகனம் பல அடி தூரத்திற்கு தூக்கிவீசப்பட்டு சாலையில் உருண்டோடியது.

சம்பவ இடத்திலேயே மணமகள் சமந்தா பலியானார். மணமகன் ஆரிக் ஹட்சின்சன் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

ஜேமி கொமொரோஸ்கி என்ற 25வயது இளம்பெண், மது குடித்துவிட்டு அதிவேகத்தில் காரை இயக்கி மணமக்களின் வாகனத்தில் இடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!