பிரான்ஸில் விடுமுறையை கழிக்கச் சென்ற பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம்!

பிரான்சின் தென்மேற்கு சவோய் பகுதியில் உள்ள வால் தோரன்ஸ் ஸ்கை ரிசார்ட்டில் பனிச்சரிவில் சிக்கி பிரித்தானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெயர் குறிப்பிடப்படாத 27 வயதான பிரித்தானிய பிரஜை குறித்த ரிசார்டில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றிருந்ததாகவும், இதன்போது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
குறித்த பிரஜை பனிச்சரிவில் சிக்கியகபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்தாக தெரிவிக்கப்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட்ட நபரை பனியிலிருந்து வெளியே இழுத்து முதலுதவி அளித்து, பின்னர் அவரை ஆவெர்க்னே-ரோன்-ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள கிரெனோபில் மருத்துவமனைக்கு மீட்பு குழுவினர் கொண்டுச்சென்றுள்ளனர்.
உள்ளூர் வெளியீடான பிரான்ஸ்ப்ளூ, அவரை ஏற்றிச் செல்ல மீட்பு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் வானிலை நிலைமைகள் அந்த நேரத்தில் அவரை அடைய முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பிராந்திய வழக்கறிஞர் அலுவலகத்தால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் பச்லெட் கூறினார்.