வெளிநாடு ஒன்றில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
மலேசியாவின் கோலாலம்பூரில் இலங்கை இளைஞர் ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து காலை 8.40 அளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டபோது, கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்த 26 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடர்மாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் உள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் சடலமாக கிடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை கோலாலம்பூர் மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.
காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தடயங்கள் எதுவும் குறித்த குடியிருப்பில் கண்டறியப்படவில்லை என்றும் மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





