பாகிஸ்தானில் திருமண வீட்டில் நடந்த சோகம் – புதுமணத் தம்பதிகள் உட்பட 08 பேர் பலி!
பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் புதுமணத் தம்பதிகள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்தபோது வீட்டில் திருமணத்தில் கலந்துக்கொண்ட உறவினர்கள் இருந்ததாக இஸ்லாமாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாகிஸ்தானில் பெரும்பாலான குடும்பங்கள் குறைந்த இயற்கை எரிவாயு அழுத்தம் காரணமாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதாகவும், இதன்காரணமாக பல விபத்துகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





