இத்தாலியில் டென்னிஸ் போட்டியில் நடந்த துயரம் – இருவர் மைதானத்தில் மரணம்
இத்தாலியில் நடைபெற்ற ATP டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றின்போது இரு பார்வையாளர்கள் மாரடைப்பால் உயிரிழந்தமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப் போட்டி சில தினங்களுக்கு டூரின் (Turin) நகரில் நடைபெற்றது. அன்றையதினத்தில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவைல இத்தாலிய டென்னிஸ் சம்மேளனம் உறுதி செய்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 78 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நெஞ்சு வலி ஏற்பட்ட போது இருவருக்கும் உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து டென்னிஸ் அரங்கிலிருந்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இத்தாலிய டென்னிஸ், படேல் சம்மேளனம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.





