ஈரான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம் – இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட நபர் மரணம்
ஈரானின் விமான நிலையத்தில் விமான இயந்திரத்துக்குள் ஊழியர் ஒருவர் இழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
Chabahar Konarak விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த Varesh Airline விமானத்தை அவர் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
JACDEC எனும் விமானப் பாதுகாப்பு நிறுவனம் அந்தச் சம்பவம் குறித்த தகவலை வெளியிட்டது. அந்த ஊழியர் போயிங் 737-500 ரக விமானத்தின் பாதுகாப்புப் பகுதியில் ஒரு கருவியை விட்டுச் சென்றதை உணர்ந்தார்.
அதை எடுப்பதற்காகத் திரும்பச் சென்றபோது இயங்கிக் கொண்டிருந்த இயந்திரத்தால் அவர் உள்ளே இழுக்கப்பட்டார்.
அந்தப் பாதுகாப்புப் பகுதிக்குள் யாரும் உள்ளே செல்வதைத் தடுக்கத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்ற ஊழியர் இழுக்கப்பட்டதும், இயந்திரம் தீப்பற்றிக்கொண்டது.
ஊழியரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது. ஈரானின் விமானப் போக்குவரத்து ஆணையம் சம்பவம் குறித்து விசாரிக்கிறது.