துபாய் விமான கண்காட்சியில் ஏற்பட்ட விபரீதம் – விமானி பலி!
துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்திய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவ்விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் இந்திய HAL தேஜாஸ் என்ற போர் விமானமே இன்று விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகும் முன்பு நேரடியாக தரையை நோக்கிச் செல்வதை காணொளிகள் காட்டுகின்றன.
“விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)




