கிறிஸ்துமஸ் பயணங்களில் கடும் நெரிசல்: 37 மில்லியன் வாகனங்கள் வீதியில் இறங்க வாய்ப்பு
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படும் என RAC அமைப்பு எச்சரித்துள்ளது.
டிசம்பர் 25-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 37.5 மில்லியன் பொழுதுபோக்கு பயணங்கள் மேற்கொள்ளப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 8 மில்லியன் பயணங்கள் அதிகமாகும்.
2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் பரபரப்பான கிறிஸ்துமஸ் முந்தைய காலமாக இது அமையவுள்ளது.
வானிலை சீராக இருந்தாலும், குளிர் மற்றும் மூடுபனி காரணமாக பயணங்கள் பாதிக்கப்படலாம் என்பதால், வாகன சாரதிகள் தங்களது பயணங்களுக்கு மேலதிக நேரத்தை ஒதுக்குமாறும், வேகத்தை கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





