சீனாவுக்கான வர்த்தக வரி குறைக்கப்படலாம் – மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட டிரம்ப்

சீனாவுக்கான வர்த்தக வரி குறைக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெரிவித்துள்ளார்.
இதனை அவரது சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 145 சதவீமாக வரியை 80 சதவீதத்திற்கு குறைப்பது சரியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
எனினும் இறுதி முடிவெடுப்பதை நிதியமைச்சர் ஸ்கோட் பெஸ்ஸண்ட்டிடம விடுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பெஸ்ஸண்ட்டும் வர்த்தகப் பேச்சு நடத்தும் அமெரிக்கத் தலைமை அதிகாரி ஜேமிசன் கிரியரும் சுவிட்சர்லந்தில் சீனத் துணைப் பிரதமர் ஹீ லிபெங்கைச் சந்திக்கவிருக்கின்றனர்.
அமெரிக்காவின் 145 சதவீத வரிக்குப் பதிலடியாகச் சீனா அமெரிக்கப் பொருள்களுக்கு 125 சதவீத வரி விதித்திருந்தது.
சீனாவுக்கான வர்த்தக வரியை அமெரிக்கா குறைப்பதற்கு முன் சீனா அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த வரியைக் குறைக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.