உற்பத்தி கோளாறு! அமெரிக்காவில் 1.27 லட்சம் வாகனங்களை மீளப் பெறும் டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 27 ஆயிரம் வாகனங்களை மீளப் பெறுகிறது.
வாகனங்களில் உற்பத்தி கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சினை ஒன்று இதற்கு காரணமாகும்.
டுண்ட்ரா, லெக்சஸ் ரகங்களைச் சேர்ந்த வாகனங்கள் மீளப்பெறப்படுவதாக அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது.
மீளப்பெறப்படும் வாகனங்கள் திருத்தப்பட்டு மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இந்த மீளப்பெறும் நடவடிக்கையானது அமெரிக்காவில் வாகனப் பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்யும் ஒரு பகுதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள், அருகில் உள்ள டொயோட்டா அல்லது லெக்சஸ் விநியோகஸ்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)





