சிங்கப்பூரில் கடுமையாகும் சட்டம் – புதிய சட்டமூலம் நிறைவேற்றம்
சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் முக்கியத் தகவல் உள்கட்டமைப்பின் உரிமையாளர்கள், கூடுதல் வகையான சம்பவங்களைத் தெரியப்படுத்த வேண்டும்.
விநியோக நடவடிக்கைகளில் ஏற்படும் சம்பவங்களும் அவற்றில் அடங்கும். இணைய மோசடிகளில் ஈடுபடுவோரின் புத்தாக்கமான ஏமாற்று வழிகளைக் கையாள அவ்வாறு தெரியப்படுத்துவது உதவும் என்று தொடர்பு, தகவல் மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
அத்தகைய ஏமாற்று வழிகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, அதன் தற்போதைய கட்டமைப்புக்கு அப்பால் உள்ள நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கும். சிறப்பு இணையப் பாதுகாப்பு நலன்களைக் கொண்ட நிறுவனங்கள் அவற்றுள் அடங்கும்.
அந்த நிறுவனங்கள் ஊடுருவலுக்கு இலக்கானால், சிங்கப்பூரின் தற்காப்பு, வெளியுறவு, பொருளாதாரதம் பொதுச் சுகாதாரம், பொதுப் பாதுகாப்பு முதலியவை கணிசமான பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்று டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.