அமெரிக்காவின் டெக்சாஸை தாக்கிய பலத்த சூறாவளி ;நால்வர் பலி!
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நேற்றய தினம் (மே 16) வீசிய பலத்த சூறாவளியில் நால்வர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றால் உயர்மாடிக் கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் சேதமுற்றதாகவும் கிட்டத்தட்ட 800,000 வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டதாகவும் நகர மேயர் ஜான் வைட்மைர் தெரிவித்தார்.போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளும் சாலை விளக்குகளும் செயல்படவில்லை என்று தெரிவித்தார். மணிக்கு 129 முதல் 161 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக அவர் கூறினார். பொதுமக்களை முடியுமான வரை வெளியிடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கும்படிப் அவர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை அரசாங்கப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் எனவும், அத்தியாவசியப் பணிகளில் இருப்போர் தவிர்த்து மற்ற ஊழியர்கள் வேலைக்குச் செல்லவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார்.
சூறாவளியால் மரங்கள் விழுந்ததில் நால்வர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேயர் கூறினார்.
ஹூஸ்டன் வட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் வெள்ள அபாயம் குறித்து வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.