வடகொரியாவிற்கு பயணிக்கும் முக்கிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள்!

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி உருவாகி 80 ஆண்டுகள் ஆகுகின்ற நிலையில், நாளைய தினம் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக பல நாடுகளில் இருந்தும் தலைவர்கள் வருகை தருவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதன்படி சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து உயர்மட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லாவோஸ் ஜனாதிபதி தோங்லவுன் சிசோலித்தும் (Thongloun Sisoulith) இதில் கலந்துகொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் நடவடிக்கையில் வடகொரியா தங்கள் நாட்டு துருப்புக்களை ரஷ்யாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.
அத்துடன் அமெரிக்கா சீனாவிற்கு அதிக வரிவிதிப்புகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சீனாவுடான உறவையும் வடகொரியா வலுப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் இவ்விரு நாடுகளும் வடகொரியாவுடன் நட்பு பாராட்டுவதில் பெரும் பங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.