ஈரானின் உயர்மட்ட தளபதி அலி ஷத்மானி இஸ்ரேலிய தாக்குதலில் மரணம்
இரவு நேர தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அவர் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிக நெருக்கமான நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அறிக்கையில், “இஸ்ரேலிய விமானப்படை தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஒரு பணியாளர் கட்டளை மையத்தைத் தாக்கி, போர்க்கால தலைமைத் தளபதியும், மிக மூத்த இராணுவத் தளபதியும், ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமான நபருமான அலி ஷட்மானியைக் கொன்றனர்” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஈரானிய ஆயுதப் படைகள் இரண்டிற்கும் ஷாட்மானி தலைமை தாங்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.





