போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – அமெரிக்கா நேட்டோவை விட்டு வெளியேறும் : ட்ரம்ப் எச்சரிக்கை!
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடனடி தீர்வை எட்டுமாறு விளாடிமிர் புட்டினிடம் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனக்கு விளாடிமிர் நன்றாகத் தெரியும், இது அவர் செயல்பட வேண்டிய நேரம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவ உதவியைக் குறைப்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் கூறினார்.
மற்ற உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை அதிகரிக்கத் தவறினால் அமெரிக்கா நேட்டோவை விட்டு வெளியேறக்கூடும் என்று அவர் மீண்டும் எச்சரித்தார்.
(Visited 3 times, 1 visits today)