தமிழ்நாடு

திருப்பூர் – தாராபுரத்தை அடுத்த மூலனூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது

தாராபுரம் அடுத்த மூலனூரை சேர்ந்தவர் சேகரன் (45) இவர் பட்டா மாறுதலுக்காக கடந்த 9ம் திகதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் (40) இது தொடர்பாக விசாரணை நடத்த சேகரனை அழைத்துள்ளார்.

அப்போது பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வேண்டு மென சண்முகம் கேட்டதாக தெரிகிறது.இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சேகரன், இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்தார்.

இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு பொலிஸ் இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான பொலிஸார் இன்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சேகரனிடம் கொடுத்து சண்முகத்திடம் கொடுக்க வைத்தனர்

இதனை அவர் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு மறைந்திருந்த பொலிஸார் சண்முகத்தை கைது செய்தனர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்