திருமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் 6ம் இடம் – ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டு
திருகோணமலை ஶ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்சனா கோணேஸ் க.பொ.த சாதரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் 6 ஆம் இடத்தையும் தமிழ் மொழி மூலமாக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இம்மாணவியை நேரில் அழைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கல்வி நடவடிக்கையில் அக்கறை செலுத்திய அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும் மாணவியின் வேண்டுகோளின் பேரில் பாடசாலை பல நாட்களாக நிலுவையில் இருந்த காணியை அப்பாடசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது.

(Visited 14 times, 1 visits today)





