இலங்கை

சிறுவர்களுக்கான மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் திருமலை ஆண் அணியினர் சம்பியன்

உலக சிறுவர் தினத்தையொட்டி கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சிறுவர்களுக்கான மென்பந்து கிறிகெட் சுற்றுப்போட்டி நேற்று (01) திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நெளபிஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டிக்கு கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் (திருமதி) ஆர்.றிஸ்வானி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் பி.மதனவாசகன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொன்டு சிறப்பித்தனர்.

இந்த கிறிகெட் சுற்றுப்போட்டியில், கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்கள் பங்குபற்றினர்.

மாவட்ட ரீதியாக நடைபெற்ற மென்பந்து கிறிகெட் சுற்றுப் போட்டிகளில் தெரிவாகியவர்களை மாகாண மட்டத்தில் கலந்துகொள்ள வைக்கும் நோக்கில் இடம்பெற்ற இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 3 அணியினரும், பெண்கள் பிரிவில் 3 அணியினரும் இப்போட்டியில் பங்குபற்றினர்.

அணிக்கு 11 பேர் கொண்ட இச்சுற்றுப்போட்டி, 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அமைந்தது. இதில் திருகோணமலை மாவட்ட ஆண்கள் அணியினர் வெற்றிபெற்றனர். பெண்கள் அணியில் மூன்று மாவட்ட அணியினரும் கூட்டு வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் வெற்றிபெற்ற பெண்கள் அணியினருக்கான கூட்டு கிண்ணத்தை கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் (திருமதி) ஆர்.றிஸ்வானியும், ஆண்களுக்கான சம்பியன் கிண்ணத்தை கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நெளபீஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

மாகாண மட்ட இறுதிப் போட்டிக்காக நடாத்தப்பட்ட கிறிகெட் சுற்றுப்போட்டியிக்கு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் அனுசரனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

 

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!