முழு உடல் தகுதியுடன் ஆஸ்திரேலிய அணியில் இணைந்த டிம் டேவிட்
20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது.
மிட்செல் மார்ஷ்(Mitchell Marsh) தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்(Pat Cummins) இடம் பெறவில்லை.
மேலும், காயம் குணமடையாததால் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். அடுத்த போட்டிகளில் அவர் அணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருந்த அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட்(Tim David) டி20 தொடரில் விளையாடுவதற்கு முழு உடல் தகுதியுடன் உள்ளார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.





