அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த TikTok!
அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக TikTok தளமும் அதை நிர்வகிக்கும் ByteDance நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
TikTok செயலியை விற்க வேண்டும் அல்லது தடையை எதிர்நோக்க வேண்டும் என்ற சட்டத்தை நிறுத்த வழக்கு தொடுக்கப்படுகிறது.
அத்தகைய சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று இருதரப்பும் வாதாடுகின்றன. TikTok செயலி தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) சென்ற மாதம் கையெழுத்திட்டார்.
அதன்படி ByteDance நிறுவனம் 9 மாதங்களுக்குள் TikTok செயலியை விற்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இல்லையெனில் பாதுகாப்பு அக்கறைகளால் அந்தச் செயலி நாட்டில் தடை செய்யப்படும் என்று சட்டமூலத்தில் தெரிவித்தது.
சீனா அந்தச் செயலியை வைத்து அமெரிக்காவில் உள்ள 170 மில்லியன் பயனீட்டாளர்கள் மீது வேவு பார்க்கலாம் என்ற கவலை எழுந்திருக்கிறது.
அமெரிக்கப் பயனீட்டாளர்களின் தரவுகளைப் பகிரவில்லை என்று TikTok தொடர்ந்து கூறிவருகிறது.