உலகம்

நால்வரின் உயிரை பறித்த TikTok சவால்! அதிர்ச்சியில் பயனாளர்கள்

உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள TikTok தளத்தில் தற்போது பிரபலமாகப் பின்பற்றப்படும் சவாலில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிப்பது அந்தச் சவாலாகும். கடந்த 6 மாதங்களில் அந்தச் சவாலில் ஈடுபட்டவர்கள் கடலில் குதித்ததும் கழுத்து முறிபட்டு மூழ்கி உயிரிழந்துள்ளனல்.

அவர்களின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று உயிர்க்காப்பாளர் ஒருவர் கூறினார். இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் தமது மனைவியும் பிள்ளைகளும் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒருவர் அதிவேகப் படகிலிருந்து குதித்து உயிரிழந்தார்.

அதன் பின் மூவர் அதே விதத்தில் உயிரிழந்துள்ளார். TikTokஇல் #boatjumping என்று தேடிப்பார்த்தால் அந்தச் சவாலில் ஈடுபட்டப் பலரின் காணொளிகளைக் காணலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

அந்தச் சவால், பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டாலும் இவ்வாண்டின் தொடக்கத்தில் தான் அது பிரபலமடைந்தது. படகின் வேகமும் குதிப்பவர்கள் தண்ணீரைத் தொடும் விதமும் அவர்கள் தரையில் குதிப்பதைப் போன்ற விளைவுகளை உண்டாக்கும்.

தலையும் கழுத்தும் பாதுகாக்கப்படவில்லை என்றால் குதிப்பவர்கள் உயிரிழக்கலாம் அல்லது அவர்களின் உடல் நிரந்தரமாகச் செயலிழக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்