நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று சனிக்கிழமை (21) மாலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின்னர், இலங்கையில் இருந்து வடகிழக்கு திசையில் வங்கக்கடலை நோக்கி நகரும்.
40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்களுக்கு மேலாக 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை மற்றும் மிகவும் கொந்தளிப்பான அல்லது கொந்தளிப்பான கடற்பரப்புகளை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.