தடையை மீறிய தக் லைஃப்.. கமலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.
கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதுவே இந்த படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் அதற்கு மேல் பெரிய இடியாக வந்திருக்கிறது மற்றொரு சம்பவம். அதாவது படம் வெளியான முதல் நாளே சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் படத்தின் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்.
இப்படி எதுவும் தக் லைஃப் படத்திற்கு வரக்கூடாது என்பதற்காக சட்ட விரோதமான இணையதளங்களில் படங்களை வெளியிடக்கூடாது என ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. நீதிபதியும் இந்த இணையதளங்களில் படங்களை வெளியிடக்கூடாது என தடை செய்தது.
ஆனால் தடையை மீறியும் இன்று தக் லைஃப் படம் இணையத்தில் வெளியாகி பேர அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒருபுறம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இணையத்தில் வெளியாகி உள்ளதால் வசூல் இன்னும் அடி வாங்க வாய்ப்பு இருக்கிறது.