முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிப்பு
முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் இன்று (23) முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 110 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்குமான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.




