அமெரிக்காவில் அதிர்ச்சி – மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் பலி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்தபோது, சுமார் 2,500 பேர் வசிக்கும் ஸ்பிரிங் க்ரோவ் பாடசாலை மாவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டது.
எனினும் இந்த சம்பவத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த பொலிஸாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ உத்தரவிட்டுள்ளார்.
FBI உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க முகவர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.





