ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதலில் மூவர் காயம்
ஜெர்மனியில் டியுஸ்பேர்க் நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜெர்மனியில் டியுஸ்பேர்க் நகரத்தில் அமைந்து இருக்கின்ற உடற்பயிற்சி செய்கின்ற ஒரு இடத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதாவது நேற்றைய தினம் ஏப்ரல் 19 ஆம் திகதி இனம் தெரியாத நபர் ஒருவர் இந்த உடற்பயிற்சி நிலையத்தில் அத்து மீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த சரமாரியான தாக்குதலின் போது 3 பேர் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவந்திருக்கின்றது.
மேலும் பலத்த காயமடைந்த 3 பேரும் வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்துச்செல்லப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரியவந்திருக்கின்றது.
இதேவேளையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.
தற்பொழுது தப்பியோடிய நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.