இலங்கையின் சில பகுதிகளில் மூன்று நாள் நீர்வெட்டு!

கண்டியின் பல பகுதிகளில் இன்று (28) பிற்பகல் 2:00 மணி முதல் 36 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று கண்டி மாநகர சபையின் மாநகர ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 2:00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பேராதனை சாலை, வில்லியம் கோபல்லவ மாவத்தை, கண்டி நீதிமன்ற வளாகத்திலிருந்து நகர சபை சந்தி வரை, அஸ்கிரிய, கண்டி ஏரி சுற்று, ராஜபிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னேகும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகரத்திற்குள் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
கண்டி பல்வகை போக்குவரத்து முனைய மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் போது நீர் விநியோக பாதையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கண்டி பல்வகை போக்குவரத்து முனைய மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் போது நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.