பிரான்ஸில் பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – கடும் நெருக்கடியில் அதிகாரிகள்
பிரான்ஸில் 299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை இந்த அச்சுறுத்தல்கள் பதிவாகியுள்ளது.
அராஸ் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நிலவிய பதட்டமான சூழ்நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 299 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 75 பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் இதுவரை பலரை கைது செய்துள்ளோம். அவர்களில் பலர் 11, 12 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள்!” என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அச்சுறுத்தல் விடுபவர்களுக்கு 3 வருட சிறையும், 50,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.