ஜெர்மனியில் உதவி பெறும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் உதவி பெறும் மக்களுக்கு சமூக உதவி பணம் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர் வரும் வருடத்தில் இருந்து சமூக உதவி பணத்தில் பாரியளவு உயர்ச்சி ஏற்படவுள்ளதாக ஜெர்மனியின் தொழில் அமைச்சர் வுபேட்றஸ் றைல் அவர்கள் தெரிவித்து இருந்தார்.
குறிப்பாக இதுவரை காலங்களும் சமூக உதவி பணம் 501 யூரோவாக இருக்கும் நிலையில் எதிர்வரும் வருடம் 563 யூரோவாக இந்த தொகை உயர்த்தப்படும் என்றும் ஜெர்மனியின் தொழில் அதிபர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜெர்மனியின் மிக பெரிய தொழிற்சங்கமான கெசாட் மெட்றால் என்று சொல்லப்படுகின்ற அமைப்பினுடைய தலைவர் வொல் அவர்கள் இது தொடர்பான கருத்தை தெரிவித்து இருக்கின்றார்.
அதாவது ஜெர்மனியின் தொழில் அமைச்சருடைய இந்த நடவடிக்கைவானது மிகவும் பாகுகாடுவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.