ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் வைரஸ் – பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குரங்கு அம்மை வைரஸ் ஒரு தோல் நோய் எனவும் உடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கு முன்பே காய்ச்சல், இருமல், சளி, தலைவலி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வைரஸால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளின் தோலில் தடிப்புகள் ஏற்படுகின்றன, மற்றவர்களுக்கு அப்படி ஏற்படாது.
கர்ப்பிணிப் பெண்கள், இதய நோயாளிகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் விளைவாக, அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும், அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், அறிகுறிகளைக் காட்டும் நபர்களுக்கு PCR பரிசோதனையை பரிந்துரைக்கவும், வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துமாறும் மருத்துவர்களிடம், விக்டோரியன் சுகாதார ஆணையம் கேட்டுள்ளது.