இலங்கையில் இளைஞர்களிடையே அச்சுறுத்தும் புதிய பாதிப்பு – சுகாதார பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் இளைஞர்களிடையே புதிதாக நோய் தொற்று ஒன்று வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டினியா (Tinea) எனப்படும் தோல்நோயே இவ்வாறு பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
தோல்நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க இதனை தெரிவித்தார்.
டினியா எனப்படும் இந்த நோயானது பூஞ்சை தொற்றினால் (Fungal infection) பரவுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நோய்க்கான உரிய சிகிச்சைகள் காணப்பட்டாலும் அவை முறையாக வழங்கப்படாமையினால், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மந்த நிலையை அடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
தகுதி வாய்ந்த வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)