சிங்கப்பூரில் வேகமாக அச்சுறுத்தும் கொரோனா தொற்று!
சிங்கப்பூரில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த இரு வாரங்களாக இந்த தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது. எனினும் உள்ளூரில் பரவும் கொரோனா வகைகள் மேலும் வேகமாகத் தொற்றுவதாகவோ, மேலும் கடுமையான நோயை ஏற்படுத்துவதாகவோ எவ்வித அறிகுறியும் இல்லை.
நவம்பர் 26ஆம் திகதி முதல் இம்மாதம் 2ஆம் திகதி வரை சுமார் 32,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதற்கு முந்திய வாரம் அந்த எண்ணிக்கை சுமார் 22,000ஆக இருந்தது. தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 225 ஆகும். அதற்கு முந்திய வாரம் அந்த எண்ணிக்கை 136 ஆகும்.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் அன்றாடச் சராசரி எண்ணிக்கை 4க்கு உயர்ந்துள்ளது. அதற்கு முந்திய வாரம் அது ஒன்றாக இருந்தது.
தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் JN.1 ரகக் கொரோனாவால் அவதியுறுகின்றனர். தடுப்புமருந்தின் வீரியம் குறைவது, அதிகமானோர் பயணம் மேற்கொள்வது, அதிகமான சமூக நிகழ்ச்சிகள் போன்றவை வைரஸ் வேகமாக பரவுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உடல்நலத்தைக் கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.