டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்புடன் இஸ்ரேல் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வர வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காசா போரை இஸ்ரேல் அரசு கையாளும் விதத்திற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்
(Visited 4 times, 1 visits today)