இஸ்தான்புல்லில் காசா மக்களுக்காக ஒன்றுத்திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
இஸ்தான்புல்லின் கலாட்டா பாலத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒன்றுத் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீனியர்களுக்காக தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாலஸ்தீனிய சார்பு மற்றும் இஸ்லாமிய குழுக்களின் கூட்டமைப்பான தேசிய விருப்ப மேடையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் துருக்கிய மற்றும் பாலஸ்தீனிய கொடிகளை அசைத்து “சுதந்திர பாலஸ்தீனம்” என்று கோஷமிட்டனர்.
ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் மகன் பிலால் எர்டோகன் கூட்டத்தில் காசாவிற்கான உதவிகளை வலியுறுத்தி உரையாற்றினார்.
“சிரியாவில் உள்ள முஸ்லிம்கள் உறுதியுடன், பொறுமையாக இருந்தனர், அவர்கள் வெற்றியை அடைந்தனர். சிரியாவுக்குப் பிறகு, காசா முற்றுகையிலிருந்து வெற்றியுடன் வெளிப்படும்,” என்றும் அவர் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)