ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தாமஸ் வால்ட்பி நியமனம்
கோபன்ஹேகன் விமான நிலையத்தின் தலைவராக இருந்த தாமஸ் வால்ட்பி, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இந்த வருட இறுதியில் அவர் மேற்கு ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான விமான நிலையத்தை பொறுப்பேற்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹீத்ரோ விமான நிலையம் கடந்த ஆண்டு மேற்கு ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையமாக மாறியது.
எவ்வாறாயினும், பிரித்தானிய விமான நிலைய ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக சம்பளத்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், கடந்த வாரம் 2,000க்கும் மேற்பட்ட விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
பின்னர், சம்பள உயர்வு தொடர்பாக அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு உடன்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஹீத்ரோ விமான நிலையத்தின் தற்போதைய தலைவர் 12 வருட சேவைக்குப் பிறகு செப்டம்பர் 30 அன்று பதவியில் இருந்து விலகுகிறார்.