இரவு நல்ல தூக்கத்திற்கு இந்த வைட்டமின் ‘பி6’ முக்கியம்!! சாப்பிட வேண்டிய உணவுகள்

உங்களால் இரவு சரியாக தூங்க முடியவில்லையா? அல்லது தூங்கிப் பிறகும் சோர்வாக தான் உணர்கிறீர்களா? ஆம் என்றால், அதற்கு உங்களது உடலில் வைட்டமின் பி6 குறைபாடு தான் காரணம். பொதுவாக இந்த வைட்டமின் குறைபாடு பிரச்சனை இருந்தால் சருமத்தில் அலர்ஜி, உச்சந்தலையில் சொரிவு போன்றவை ஏற்படும். இதனால் மனசோர்வு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரும். ஆனால் தூக்கத்திற்கும் இந்த வைட்டமினுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் முக்கியம்? இந்த வைட்டமின் நம்முடைய மொழி ஆரோக்கியத்திற்கு எப்படி வேலை செய்கிறது தெரியுமா? இப்போது இதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் முக்கியம்?
செரோடோனின் உற்பத்தி:
செரோடோனின் என்பது ஒரு நரம்பு கடத்தியாகும். அது நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஹார்மோன் என்று அறியப்படுகின்றது. இது நல்ல தூக்கத்திற்கும், நம்முடைய மனதை தளத்துவதற்கும் மிகவும் அவசியம். அந்த வகையில் வைட்டமின் பி6 ஆனது டிரிப்டோபேன் என்ற அமினோ அமிலத்தை செரோடோனியாக மாற்ற பெரிதும் உதவுகின்றது.
மெலடோனினை ஒழுங்குபடுத்தும்:
செரோடோனின் தான் மெலடோனின் ஹார்மோன் ஆக மாற்றப்படுகிறது. இந்த ஹார்மோன் தான் உடலில் சர்க்காடியன் தளத்தை கட்டுப்படுத்தி, இது தூங்குவதற்கான நேரம் என்று உடலை தூண்டும். உடலில் வைட்டமின் பி6 குறைபாடு இருந்தால் மெலடோனின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் இரவு தூங்குவதில் சிரமம் அல்லது தூக்கமின்மை ஏற்படும்.
மன அழுத்தத்தை மற்றும் மனநிலையை கட்டுப்படுத்தும்:
மனநிலை சிறப்பாக இருக்க வைட்டமின் பி6 பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த வைட்டமினானது மூளையில் மகிழ்ச்சியான ஹார்மோனை உற்பத்தியாகி, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ஒருவேளை உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும். இதனால் இரவு தூங்குவது கடினமாக இருக்கும்.
ஆக்சிஜன் பயன்பாட்டை மேம்படுத்தும்:
வைட்டமின் பி6 ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியம். இந்த வைட்டமினானது ஒட்டுமொத்த உடலுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும். இதன் காரணமாக இந்த வைட்டமின் செல்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளில் பயனுள்ள ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும். இதுதவிர, வைட்டமின் பி6 ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியாக்கும்.
வைட்டமின் பி6 நிறைந்துள்ள உணவுகள்:
சூரியகாந்தி விதைகள், வெண்ணெய், கீரை, தானியங்கள், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கோழி, சால்மன், சூரை போன்றவற்றில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது.
நினைவில் கொள்:
இரண்டு வாரத்திற்கும் மேலும் உங்களால் சரியாக இரவு தூங்க முடியவில்லை என்றால் உடனே மருத்துவரை சந்திக்கவும். மருத்துவரிடம் வைட்டமின் பி6 பரிசோதனை செய்து கொள்ள அணுகவும். ஏனெனில் அதன் குறைபாட்டை அறிகுறிகளால் கண்டறிய முடியாது.