90’s களின் கனவு நாயகன் தளபதி படத்தில் இணைந்தது ஏன்? அப்பா கூறிய விளக்கம்
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் தனது மகன் பிரசாந்த் நடிக்க சம்மதித்தது ஏன் என்கிற கேள்விக்கு நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.
நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடிப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்து வருகிறது.
ஹாலிவுட்டில் அயன் மேனாக கலக்கிய ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதினை சர்வ சாதாரணமாக நடித்து வாங்கி வருகிறார். ஆனால் இங்கு இன்னமும் நடிகர்கள் மத்தியில் ஈகோ கிளாஷ் இருந்து வரும் சூழ்நிலையில், விஜய் படத்தில் பிரசாந்த் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான காரணம் என்ன எனக்கு ஒரு கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக மாறிவிட்ட நிலையில், மல்டி ஸ்டார் படங்கள் வருவது ஆரோக்கியமான ஒன்றுதான்.
நடிகர் விஜய் மற்றும் பிரசாந்த் நெருங்கிய நண்பர்கள் என்பதால் வெங்கட் பிரபு சொன்ன இந்த கதை பிடித்தபோது நான் நடிக்கப் போகிறேன் அப்பா என்று கூறிவிட்டு பிரசாந்த் இந்த படத்தில் நடிகர் சம்மதித்தார்.
அவருடைய படங்களை அவர்தான் முடிவு செய்கிறார். நான் அதில் எந்த தலையீடும் இதுவரை செய்ததில்லை. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க விரும்பினால் மட்டும் சில சமயங்களில் தடுத்து இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், கோட் படத்தில் பிரசாந்துக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் தான் அவர் அதை ஏற்று நடிக்க சம்மதித்துள்ளார். படம் நன்றாக வந்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பிரசாந்தை நடிகராகவே மாற்றக் கூடாது என நினைத்தேன். பாலுமகேந்திரா முதல் பலர் என்னிடம் வந்து மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கூறினர் என்றும் பேசியுள்ளார்.