Samsung வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை
உலகளவில் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில், சம்பள உயர்வு கோரி சுமார் 28,400 ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தொடங்கி 55 ஆண்டுகளில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால், வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளாக போராட்டக்காரர்கள் புலம்பிக் கொண்டு வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய மெமரி சிப்ஸ் தயாரிப்பாளர்களான அந்நிறுவனத்தின் நிர்வாகம், ஜனவரி மாதம் முதல் தொழிற்சங்கத்துடன் ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இரு தரப்பும் தங்கள் கருத்து வேறுபாடுகளைக் குறைக்கத் தவறிவிட்டன.
சாம்சங் நிறுவனம் பல ஆண்டுகளாக மெமரி சிப்களை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளராக இருந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதன் சிப் பிரிவில் இருந்து சுமார் 1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.