இங்கிலாந்தின் மிக ஆபத்தான தாவரம் இதுதான் : விடுமுறையில் செல்வோருக்கு எச்சரிக்கை!
இங்கிலாந்தில் வளர்க்கப்பட்ட மோசமான தாவரம் ஒன்றால் சிறுவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பற்றிய தகவல்களை பெற்றோர் பகிர்ந்துகொள்கின்றனர்.
பெர்க்ஷயரில் உள்ள ஹங்கர்ஃபோர்டில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை அன்று அயர்லாந்தின் டப்ளினில் விளையாடிக்கொண்டிருந்தபோது புதர்களுக்குள் மறைந்து விளையாடியுள்ளார்.
இதன்போது புதரில் இருந்து வெளியே வந்த அவர், தனது இடது கையை சொறிந்துள்ளார். இதன்போது கை பெரிதாக வீங்கியதுடன், காயம் ஏற்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
முதலில் தனது மகன் எரிச்சலூட்டும் தாவரத்தில் மோதியிருக்கலாம் என்று பெற்றோர் நினைத்துள்ளனர். இருப்பினும் மறுநாள் காலையில் கொப்புளங்கள் அதிகரித்து கை வீக்கம் அடைந்துள்ளது.
இதனையடுத்து அயர்லாந்தில் உள்ள தாவரங்கள் குறித்து அவருடைய பெற்றோர் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்போதுதான் தனது மகன் ஒரு பெரிய ஹாக்வீட் செடியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஹாக்வீட் தாவரத்தின் சாறு உங்கள் தோலில் படிந்தால், சூரியன் அதைச் செயல்படுத்தினால் கொப்புளங்கள் ஏற்படும். இந்த தாவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வெயிலில் செல்லும்போது சூரிய ஒளி படாதா ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.