சாப்பிடும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய விடயங்கள்!
அன்றாட செயல்பாடுகளில் முக்கியமான ஒன்று உணவு ஆரோக்கியமான உணவை சாப்பிடும் போது சிலவற்றை செய்யாமல் இருப்பது நமது உடலுக்கு சத்துக்கள் சேர உதவும்.
அதன்படி நாம் சாப்பிடும் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் கூட உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக சாப்பிடும்போது சிலவற்றை செய்தால் உடலுக்கு தேவையான சத்து கிடைக்காது.
சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பதால் உடல் விரிவாகி சாப்பாடு எளிதில் உள்ளே செல்ல உதவும். மேலும் தேவையான அளவு சாப்பிடலாம்.
ஆனால் சாப்பிடும் போது இடையே அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வயிற்றை நிரப்பி சாப்பிட விடாமல் செய்யும். எனவே சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் தண்ணீர் குடிப்பது நல்லது.
குறிப்பாக தற்போதைய காலத்தில் சாப்பிடும் போது செல்போன் டிவி பார்ப்பது போன்ற பழக்கங்களை வைத்துள்ளனர். இவ்வாறு சாப்பிடும் போது சில நேரங்களில் நாம் சாப்பிடும் சாப்பாடு மூச்சு குழலில் சிக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தப்படும். எனவே சாப்பிடும் போது கவனம் சாப்பாட்டில் மட்டும் இருக்க வேண்டும்.
மேலும் ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த நொறுக்கு தீனிகளை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவித சத்துக்களும் கிடைக்காது.