இலங்கை

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரிக்கை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தியாக தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி பருத்தித்துறை பொலிசார் தாக்கல் செய்த மனுவை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) நிராகரித்தது.

தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள், ஊர்தி பவனிகளை நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு பருத்தித்துறை பொலிசார் குறித்த மனுவை தாக்கல் செய்தனர்.

வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய பொலிசாருக்கு அதிகாரமுள்ளதை சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதவான், அமைதியான நினைவு நிகழ்வுகளை தடுக்க முடியாதென உத்தரவிட்டார்.

1987 செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 ம் திகதி வரை தியாக தீபம் திலீபன் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்