கை, கால்களில் தெரியும் இந்த புற்றுநோய் அறிகுறிகள்

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் ஆபத்து என்பதை பெருமளவு அதிகரித்துவிட்டது. பல வகையான புற்றுநோய் இருக்கின்றன. அதில் ஒன்று நுரையீரல் புற்றுநோய்.
இவற்றை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், சிகிச்சை சாத்தியமாகும். புற்றுநோய் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நோய், இது விரைவாக கண்டறியப்படுவதில்லை என்பதால் சிகிச்சையும் எளிதாக இருப்பத்தில்லை.
அந்தவகையில் நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகள் கைகள் மற்றும் கால்களில் கூட தெரியும். அதனை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் நலமாக இருக்கலாம்.
நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன?
நுரையீரலின் உயிரணுக்களில் தொடங்கும் இந்த புற்றுநோய், உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் அதிக மரணங்களில் இதுவும் ஒன்றாகும். 2020-இல் 18 லட்சம் பேர் இதனால் உயிரிழந்தனர். புகைப்பவர்கள் மட்டுமல்ல, புகைப்பழக்கமில்லாதவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளது.
கைகள் மற்றும் கால்களில் தெரியும் அறிகுறிகள்:
1. விரல்களின் முனைகள் தடித்து விடுதல் (Digital Clubbing) ; விரல்கள் அல்லது கால் விரல்களின் முனைகள் வீங்கி, உருண்டையாக தோன்றலாம். நகங்கள் மென்மையாகி, விரல்முனை சுற்றி வளைந்து தோன்றலாம். இதற்கு காரணம் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைதல் ஆகும்.
2. கை-கால்களில் வலி அல்லது வீக்கம் : எந்த காரணமும் இல்லாமல் வலி அல்லது வீக்கம் ஏற்படலாம். இதற்கு காரணம் கட்டி நரம்புகள் அல்லது இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துதல்.
3. நகங்களின் நிறம் மாறுதல் : நகங்கள் நீலம் அல்லது ஊதா நிறமாக மாறலாம். இதற்கு காரணம் ஆக்ஸிஜன் போதாமையால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் ஆகும்.
4. கை-கால்களில் நீர் தேங்கி வீக்கம் (Edema) : திசுக்களில் அதிக திரவம் சேர்வதால் கை, கால்கள் வீக்கமடையும். இதற்கு காரணம் புற்றுநோய் லிம்பேடிக் அமைப்பு அல்லது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.
5. உணர்வின்மை அல்லது சிலிர்ப்பு (Numbness/Tingling) : கைகள்/கால்களில் மரத்துவம் அல்லது சிலிர்ப்பு உணரலாம். இதற்கு காரணம் புற்றுநோய் நரம்புகளை அழுத்துகிறது அல்லது ஸ்பைனல் கார்டை பாதிக்கிறது.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால், நுரையீரல் புற்றுநோயை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியும்.