ஹமாஸ் அழிக்கப்படும்வரை நிரந்தர காஸா போர்நிறுத்தம் இருக்காது: பிரதமர் நெதன்யாகு
ஹமாசின் ராணுவ, ஆளும் ஆற்றல்கள் அழிக்கப்படும்வரை காஸாவில் நிரந்தரச் போர்நிறுத்தம் இருக்காது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருக்கிறார்.
ஹமாஸிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக இஸ்ரேல் புதிய சண்டைநிறுத்தத் திட்டத்தை முன்வைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகுவின் கருத்து வந்துள்ளது.
முன்னதாக, சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதுவே சிறந்த வழி என்றும் பைடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகள் மாறவில்லை என்று நெதன்யாகு கூறியிருக்கிறார்.நிரந்தரச் போர் நிறுத்தம் நடப்புக்கு வருவதற்குமுன், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தும் என்றார் அவர்.