உக்ரைன் – ரஷ்ய அமைதி பேச்சுவார்த்தையில் உடனடி முன்னேற்றம் இருக்கும் – ட்ரம்ப்!
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடனடி முன்னேற்றம் ஏற்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது Truth Social மீடியாவில் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவின் 3 ஆண்டுகால படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர “இரு தரப்பினருடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
“ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் ஒரு சிறந்த நாள், “இந்த முடிவில்லாத ‘இரத்தக் களரி’ முடிவுக்கு வரும்போது காப்பாற்றப்படும் லட்சக்கணக்கான உயிர்களைப் பற்றி சிந்தியுங்கள். இது ஒரு புதிய மற்றும் மிகச் சிறந்த உலகமாக இருக்கும்.”
“அது நடப்பதை உறுதிசெய்ய இரு தரப்பினருடனும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.” அமெரிக்கா மறுகட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்த விரும்புகிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.





