பிரான்ஸில் விமானம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஓர்லி சர்வதேச விமானம் ஒன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. இரவு 8 மணி அளவில் குறித்த விமான நிலையத்துக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்தே ஓர்லியில் இருந்து Montpellier நகர் நோக்கி பறக்க இருந்த உள்ளூர் விமானம் ஒன்றே நிறுத்தப்பட்டது.
பயணிகள் வெளியேற்றப்பட்டு, விமானம் சோதனையிடப்பட்டது. இந்த நடவடிக்கை மூன்றுமணிநேரம் நீடித்ததால் அதன் பின்னர் விமானம் இயக்கப்படாமல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
(Visited 32 times, 1 visits today)